தமிழ்நாட்டில் புதிதாக 22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு: 463 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் புதிதாக 22 ஆயிரத்து 651 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா பரிசோதனை…

தமிழ்நாட்டில் புதிதாக 22 ஆயிரத்து 651 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 22 ஆயிரத்து 651 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 95 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து குணமடைந்து 33 ஆயிரத்து 646 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19 லட்சத்து 306 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 463 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதா 1971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 பேர் உயிரிழந்துள்ளனர். 3364 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டில் 909 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 388 பேருக்கும் திருவள்ளூரில் 583 பேருக்கும் திருச்சியில் 689 பேருக்கும் கோவையில் 2810 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.