வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர்…

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி எடுப்பதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு 

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.