ஓசூர் அருகே 5 ஒட்டகங்கள் மீட்பு – காவல்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரின்றிக் கட்டப்பட்டு இருந்த 5 ஒட்டகங்களை காவல்துறையினர் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். ரமலான் நோன்பு பண்டிகைக்காக ஒட்டகங்களை இறைச்சிக்காக பலியிட…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்
கேட்பாரின்றிக் கட்டப்பட்டு இருந்த 5 ஒட்டகங்களை காவல்துறையினர் மீட்டு
வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ரமலான் நோன்பு பண்டிகைக்காக ஒட்டகங்களை இறைச்சிக்காக பலியிட அழைத்துவரப்பட்டனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரமாகக் கோபசந்தரம் பகுதியில் 
ஒட்டகங்கள் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்பைச்
சேர்ந்தவர்கள் நேரில் விசாரிக்க சென்றனர். அப்பொழுது ஒட்டகத்தை அழைத்து
வந்து கட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்த மர்ம நபர்கள் அவர்களைக் கண்டதும் தப்பி ஓடி விட்டனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.