ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-v தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு பயன்பாட்டில் உள்ள நிலையில்,3- வது தடுப்பூசியாக ஸ்புட்னிக்-v தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது. தினமும் 1 லட்சத்திற்கு அதிகமான மக்கள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 40 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் தற்போது அதிகம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படுவதால், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-vக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கடந்த செப்டம்பர் மாததில் ஒரு ஒப்பந்ததில் கையெழுத்தானது. டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் சார்பில், இந்தியாவில் மூன்று கட்ட ஸ்புட்னிக்-v பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இது வெற்றிகரமாக இருப்பதாகவும் 91.6 சதவிதம் இது பயனளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஸ்புட்னிக்-v தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கவேண்டும் என டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் விண்ணப்பம் ஒன்று மத்திய அரசிடம் வழங்கியிருந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே இரண்டு கட்டமாக ஆய்வு செய்து, நேற்று இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்த ஒப்புதல் அளிக்கலாம் என நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து ஸ்புட்னிக்-v தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஸ்புட்னிக்-v தடுப்பூசியை போட்டுக்கொண்டால் அதுனுடைய வினைகள், எதிர் வினைகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய புள்ளிவிவரங்களை தொடர்ச்சியாக அரசுக்கு அளிக்கவேண்டும் என கூறி டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்துக்கு மத்திய அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







