தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படும் நிலையில் தருமபுரியில் காரிமங்கலம் வாரச் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனைச் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தை ஆடு, கோழி விற்பனைக்கு பெயர் பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வார்கள் என்பதால் இன்று விற்பனை களைகட்டியது.
இந்நிலையில் நாளை தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் இன்று நடைபெற்ற வாரச் சந்தைக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோன்று மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனையாகின. 1 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: