பரமக்குடியில் இலவசமாக மாஸ்க் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய உதவி காவல் ஆய்வாளர்!

பரமக்குடியில் உதவி காவல் ஆய்வாளர் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக 1000 மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால்…

பரமக்குடியில் உதவி காவல் ஆய்வாளர் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக 1000 மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைத்தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,711 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்களின் அறியாமையால் பலர் முக கவசம் அணியாமல் சாலைகளில் உலா வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் விஜய பாஸ்கரன் தனது சொந்த செலவில் இலவசமாக 1000 மாஸ்க்களை பரமக்குடி பஸ் நிலையம் பகுதியிலுள்ள பயணிகள் ஓட்டுனர், நடத்துனர்,வியாபாரிகள், பொதுமக்களிடையே இலவசமாக வழங்கி முககவசம் அணிவதின் விளக்கத்தை எடுத்துரைத்து கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.