கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே டீக்கடையில் இளைஞர் ஒருவர் பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி, நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில், சுங்கான் கடை
அருகே தனியார் டீக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் முன்னர் இளைஞர் ஒருவர் கையில் தடியுடன் வந்து பொருள் கடை அடித்து உடைக்கும் காட்சிகள் சமூக
வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஆண்டனி ஜெரோ நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையம் மற்றும் இரணியில் காவல் நிலையம் என இரு நிலையங்களிளும் புகார்
அளித்துள்ளார்.
அந்த புகாரில் தங்கள் கடைக்கு சதீஷ் பிரபு என்பவர் உட்பட ஒன்பது பேர் வந்து உணவு அருந்தி விட்டு அதற்கு பணம் கேட்டபோது தகராறு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ம. ஶ்ரீ மரகதம்








