பிரதமர் மோடிதான் மிகப்பெரிய எதிர் கட்சியின் தலைவர் – திரிணாமுல் காங்கிரஸ்

பிரதமர் மோடிதான் மிகப்பெரிய எதிர் கட்சியின் தலைவர் என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டம் ஒன்றி பிரதமர் மோடி விமர்சித்து…

பிரதமர் மோடிதான் மிகப்பெரிய எதிர் கட்சியின் தலைவர் என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டம் ஒன்றி பிரதமர் மோடி விமர்சித்து பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் அவர்களே நாங்கள் எதிர்கட்சி இல்லை. நீங்கள் தான் நாட்டில் மிகப்பெரிய எதிர் கட்சியின் தலைவர்.

உங்களது அந்த மிகப்பெரிய எதிர்கட்சி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க, ஜனநாயகத்தை வளர்க்க, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு எதிராக உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் பேசிய வீடியோவை இணைத்து, டெரெக் ஓ பிரையன் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

https://twitter.com/derekobrienmp/status/1675113106941575174

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.