முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்

பொறுமையாக கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரின் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் அமைந்துள்ளது, சுந்தராட்சி அம்மன் கோயில். கடந்த 25 ஆம் தேதி மாலை கோயிலில் வழக்கமான பூஜைகள் முடிந்து நடை மூடப்பட்டது. மறுநாள் காலையில் கோயிலுக்கு வந்தவர்கள், உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதித்துப் பார்த்ததில், திருடன் ஒருவன் பொறுமையாக, கட்டைப் பையுடன் வந்து உண்டியலை உடைத்து சென்றது தெரியவந்தது.

சிசிடிவி காட்சியில், கட்டைப் பையுடன் கோயிலுக்குள் நுழையும் மர்ம நபர், அங்கிருந்த உண்டியலை எட்டி பார்க்கிறார். உண்டியலில் பணம் இருப்பதை உணர்ந்த கொள்ளையன், அங்கிருந்த சிசிடிவியை கவனிக்கிறார். பிறகு சிசிடிவி கேமராவை கொடூரமாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டு மெதுவாக நடந்து செல்கிறார்.

பிறகு அதைப் பற்றி கவலைப்படாமல், உண்டியலை உடைக்க முயற்சிக்கிறார் அந்தக் கொள்ளையன். ஆனால், தொடர்ந்து போராடியும் உண்டியலை உடைக்க முடியவில்லை.

பிறகு பொறுமையாக யோசித்த திருடன், சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு நீண்ட கம்பியை எடுத்து வந்து உண்டியலை உடைக்கிறார். பின்னர் அதிலிருந்த பணத்தை திருடி செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்து சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை வைத்து அந்த திருடனை பிடிக்க, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!

Gayathri Venkatesan

காபூல் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி இந்தியாவில் கைதானவர்

Ezhilarasan

உத்தரகாண்ட் வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

Halley Karthik