முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர் நிலைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. ஆறுகள், ஏரிகள், அணைகள் நிரம்பி வழிகின்றன. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் கனமழை தொடங்கியதுமே நேரில் சென்று செய்த ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செம்மஞ்சேரி அருகில் உள்ள சுனாமி காலனி பகுதியில் வெள்ள நீர் வெளியேற்றப்படுவதை இன்று நேரில் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட பலர் உடனிருக்கின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செம்மஞ்சேரி பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்பகுதியில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையும் பார்வையிட்டார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

Advertisement:
SHARE

Related posts

மக்கள் பணியை எப்போதும்போல் செய்யவேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்!

எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து; விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

Halley Karthik

’பாரம்பரிய நடைபயணத்தை’ தொடங்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்

Ezhilarasan