ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவை நினைத்து கூட பார்க்க முடியாது. ஓபிஎஸ் தலைமை அலுவலகத்திற்கு செல்ல முடியும் ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக செல்லாமல் உள்ளார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் வேண்டுமானால் சசிகலாவை இணைத்து தனி கட்சி தொடங்கட்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”திராவிட இயக்கத்தை கட்டி காத்தவர் ஓபிஎஸ். ஓபிஎஸ் இல்லையெனில் அதிமுக வை சர்வாதிகாரியான இபிஎஸ் கைப்பற்றி இருப்பார். ஜெயகுமார் அதனை வழிநெடுக விற்றுவிட்டு சென்று இருப்பார். சொந்த தொகுதியில் கூட தோற்ற ஜெயகுமாருக்கு எல்லாம் பேச தகுதி இல்லை. கட்சி தொண்டர்கள் தான் அதிமுக உரிமையாளர்கள் அவர்கள் ஓபிஎஸ்க்கு பட்டா கொடுத்து உள்ள நிலையில் புறம்போக்கு எல்லாம் பேசக்கூடாது.
அதிமுக சட்ட விதிகள் சாதாரண தொண்டர்களுக்கு கூட தெரியும். பணம் பலம் படைத்தவன் நாற்காலியை வாரி விடுவான் என்று தெரிந்து தான் ஞானி எம்ஜிஆர் சட்ட விதிகளை வகுத்துள்ளார்.
ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவை நினைத்து கூட பார்க்க முடியாது. ஓபிஎஸ் தலைமை அலுவலகத்திற்கு செல்ல முடியும் ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக செல்லாமல் உள்ளார். அதிமுக ஓபிஎஸ் வசம் செல்லும் போது மாபெரும் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது.அப்போது பழனிசாமியை ஓரம் கட்டி விட்டு அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் என்று எதிர் பார்க்கலாம்
எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் திமுகவில் நிறைய பேர் இருப்பார்கள் என்பதை திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உணர்ந்ததால் தனது மகன் உதயநிதியை அமைச்சராக கொண்டு வந்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகத்தான் வரும். அதிமுக முழு பொறுப்பாளராக ஓபிஎஸ் தொடர்வார்.” என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.