Whatsapp – ல் நீங்கள் விரும்பும் Avatar – யை உருவாக்குவது எப்படி……..?

வாட்ஸ் அப்பில் இடம்பெற்றுள்ள Avatar அம்சத்தை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்…………!

கணினியுகமான இன்று பெரும்பாலான மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயனர்களை கவரும் வண்ணம் பல்வேறு அம்சங்களை சமூக வலைதளங்கள் வெளியிடுகின்றன. அந்த வகையில் ச்சேட்டிங் செயலியான வாட்ஸ் அப்பில் இடம்பெற்றுள்ள Avatar அம்சத்தை பற்றியும் அதனை எப்படி உருவாக்குவது என்பதை பற்றியும் இந்த தொகுப்பில் காண்போம்…………!

அக்டோபர் 2022 பயனர்களின் சுயவிவரப் படங்கள் மற்றும் தனித்துவ ஸ்டிக்கர்களுக்கான டிஜிட்டல் ஆளுமைகளை உருவாக்க அனுமதிக்கும் 3D avatar அம்சத்தை கடந்த 2022 அக்டோபர் மாதம் WhatsApp அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. 2022ல் சோதனை ஓட்டத்தில் இருந்த இந்த avatar-ல் பயனர்களின் சிகை அலங்காரங்கள், முக அம்சங்கள் மற்றும் ஆடைகளை தேர்ந்தெடுத்து உருவாக்குவதையும் பின்னர் அவற்றை சுயவிவரப் புகைப்படங்களாகவோ அல்லது 36+ தனிப்பயன் ஸ்டிக்கர்களாகவோ பயன்படுத்தலாம் என்கிற வசதியையும் 2023 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. தொடர்ந்து இந்த avatar-ஆனது கூடுதலான வெளிப்பாடுகள், அனிமேஷன், ஏ.ஐ ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை மூலம் மேம்படுத்தபட்டு வருகிறது. இந்த அம்சம் இந்தியாவிலும் உலகளவில் Android மற்றும் iOS சாதனங்களில் கிடைக்கிறது.

AVATAR – ஐ உருவாக்குவது எப்படி….? 

Manual  – ஆக உருவாக்கும் முறை

மூன்று புள்ளி menu  > அமைப்புகள் > avatar என்பதைத் தட்டவும்.

உங்கள் avara-ஐ உருவாக்கு > தொடங்கு > Create from selfie
என்பதை அழுத்தவும்.

உங்கள் avatar – க்கான  தோல் நிறம், சிகை அலங்காரம், முக வடிவம் மற்றும் உடல் வகையைத் தேர்ந்தெடுத்து, save மற்றும் continue என்பதை அழுத்தவும்.

உங்கள் அவதாரத்தின் தோற்றத்தைத் Personalized ஆக ஆக்க படிகளைப் பின்பற்றவும்.

அடுத்ததாக சேமி என்பதை அழுத்தவும்.

புகைப்படத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் முறை 

மூன்று புள்ளி menu > அமைப்புகள் > avatar என்பதை அழுத்தவும்..

உங்கள் avatar –  ஐ உருவாக்கு > start >selfie-லிருந்து உருவாக்கு என்பதை அழுத்தவும்.

camera – வை அனுமதிக்கும்படி கேட்கப்பட்டால், continue என்பதை அழுத்தவும்,

frame -ன் மையத்தில் உங்கள் முகத்தை வைத்து பதிவு செய்யவும்

உங்கள் avatar – ஐ Customize செய்யுங்கள்

save என்பதை அழுத்தி , accept கொடுத்து தொடரவும்

.உங்கள் avatar – ஐ Customize செய்யுங்கள்

save என்பதைத் அழுத்தவும்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.