பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வென்று 3வது முறை ஆட்சி அமைக்கும் – அண்ணாமலை!

வரும் மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி…

வரும் மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சேலம் வந்தார். பொதுக்கூட்ட மேடைக்கு திறந்தவெளி வாகனத்தில் வந்த மோடி,  தொண்டர்களிடம் கையசைத்தார். இன்றைய பொதுக்கூட்ட மேடையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ்,  தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சரத் குமார்,  இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர்,  இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.