அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு ஆளுங்கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம்.
இரு தரப்பு புகார் அளிக்கப்பட்டது, தற்பொழுது இரு பக்கம் அளிக்கப்பட்ட மனுவை திரும்ப பெற்றுள்ளோம். அதிமுகவில் பிளவு இல்லை. கருத்து வேறுபாடுகளே இருந்தன. அதிமுகவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கிவிட்டன. எங்கள் தரப்பு கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக மக்களுக்கான இயக்கமாக இருக்கும். எல்லோரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். சிவி சண்முகம் உள்ளிட்டோர் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. கருத்து வேறுபாடு சரி செய்யப்பட்டுள்ளது. சி.வி.சண்முகம் அலுவலகத்தில் இருந்துதான் நாங்கள் வந்தோம். அண்ணா திமுக ஒன்று கூடிவிட்டது. சி.வி.சண்முகம் அண்ணன் எங்களோடு இருக்கிறார். கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.







