பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்!

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற போது, பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்துள்ளார். தேர்தலில் பெற்ற வெற்றிக்காக விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதிக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். மேலும் தமிழகத்திற்கான நிதி, நீட் விவகாரம், மீனவர் பிரச்சனை, மேகதாது அணை குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.