வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த செந்தில்முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்…

திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த செந்தில்முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் லிப்ட் ஆப்ரேட்டராக பணியாற்றினார். இவர் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது, சிந்துபூந்துறை அருகே காவல்துறையினர்  வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வாகன சோதனையின் போது நிற்காமல் அதிவேகமாக சென்ற வாகனம் பைக்கில் வந்த செந்தில் முருகன் மீது மோதி சாலையில் இழுத்து சென்றுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கு காவல்துறையின் வாகன சோதனை தான் காரணம் எனக்கூறி உறவினர்கள், சிந்துபூந்துறை பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

மேலும் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்த நிலையில், காவல்துறையினர் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் நெல்லை ஜங்ஷன் பகுதியில் பரபரப்பு நிலவியது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.