தக்காளி விலை கிடுகிடு உயர்வு – மதுரையில் கிலோ ரூ.150-க்கு விற்பனை!

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் பாதிப்பு, அதே நேரம் வெளி மாநிலங்களிலிருந்து வரத்துக் குறைவு போன்ற…

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் பாதிப்பு, அதே நேரம் வெளி மாநிலங்களிலிருந்து வரத்துக் குறைவு போன்ற காரணங்களால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக சேமித்து வைக்க சரியான இடம் இல்லாததால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 1200 டன் தக்காளிக்கான தேவை உள்ள நிலையில், 700 டன் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

இதனால், கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் வெளிமாநில தக்காளி வரவு 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பரவலாக்க மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளது. இதற்கு, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீண்டும் தக்காளி பயிரிடாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.100 வரை விற்கப்படுகிறது.

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் இதே நிலை நீடித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளில் தக்காளி விலை கிலோ ரூ.110 தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் பீன்ஸ்- ரூ.120, இஞ்சி- ரூ.200க்கும் விற்பனை செய்யப்பாட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.