TNPSC குரூப் 1, 1A தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1, 1ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 1, 1ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. தேர்வை எழுதியுள்ள தேர்வர்கள் முடிவுகள் வெளியானதும் இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளுவது எப்படி?

தேர்வு முடிவுகளை https://tnpsc.gov.in/ என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

முடிவுகள் வெளியானதும், முகப்பு பக்கத்தில் உள்ள What’s New என்ற இடத்தில் அதற்கான லிங்க் இடம்பெறும். மேலும், அறிவிப்பு (Announcement) என்ற இடத்தில் செய்தி வெளியீடு வெளியிடப்படும்.

மேலும் அனைத்து விவரங்களையும் தேர்வுப் பலகை (Exam Dashboard) என்ற இடத்தில் அறிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை இதன் வழியாக அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் தேர்வானவர்கள் மதிப்பெண்கள் மற்றும் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேர்காணலுக்கு அழைப்பு:

குரூப் 1 மற்றும் 1ஏ முதன்மைத் தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு அடுத்தக்கட்டமாக நேர்காணல் நடைபெறுவது வழக்கம். சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்காணல் குறித்த அறிவிப்பு வெளியாகும். தேர்வானவர்கள் நேர்காணலில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். 100 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இதில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

என்னென்ன பதவிகள் நிரப்பப்படுகிறது?

குரூப் 1 : துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிக வரிகள் துறையின் உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி துறையின் உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர் ஆகிய பதவிகள் நிரப்பப்படும்.

குரூப் 1ஏ : உதவி வனப் பாதுகாவலர் பதவி நிரப்பப்படும்.

2026-ம் ஆண்டுக்கான குரூப் 1 அறிவிப்பு ஜூன் 23-ம் தேதி வெளியாகி, முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.