அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பணிகள் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
2023 -ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நான்காவது நாளாக இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவடையும் தருவாயில் இருந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதாக கூறினார். அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பியிருக்கலாம் எனவும் அவர் பேசினார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தின் போது திட்டம் குறித்து விவசாயிகளுக்கு முறையாக விளக்கப்படவில்லை எனவும், தற்போது வீடு வீடாக சென்று திட்டம் குறித்து விளக்கி வருவதாகவும் பேசினார். விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வந்த இந்த பணி, மழை காரணமாக தாமதமானதாவும், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான முழு பணிகளும் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் எனவும் கூறினார் .