இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணிக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதையடுத்து ஒருநாள் போட்டித் தொடரானது கடந்த 10ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கியது. அன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 39.4 ஓவர்களில், 215 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நுவானிடு பெர்னாண்டோ 50 ரன்களும், குசால் மெண்டிஸ் 34 ரன்களும், துனித் வெல்லலாகே 32 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி கலமிறங்குகிறது.








