ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் இரு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மத்திய காஷ்மீர் பகுதியான கந்தர்பால் மாவட்டத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற சோனாமார்க் மலைப் பிரதேசத்தில் பல்டல் பகுதியில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாகவே இந்த பகுதியில் பனிச்சரிவு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று ஏற்பட்ட பனிச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை என்றும் கூறியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று மாலை இந்த பகுதிகளில் பனிச்சரிவு மற்றும் மழை அதிகமாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். ஸ்ரீநகரில் தற்போது வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியசாகவும் பள்ளதாக்கின் நுழைவுவாயிலான காசிகுண்டில் குறைந்தபட்சம் 1.6 டிகிரி செல்சியசாகவும் இருந்து வருகிறது.