தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய நிதித்துறைச் செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க், தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை ஐஜியாக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டு இருந்த அவினாஷ்குமார் மாற்றப்பட்டு புதிய ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு ஐபிஎஸ் கேடரை சேர்ந்த அஸ்ரா கர்க், நேர்மையான அதிகாரி என்ற பெயரை பெற்றவர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் முன்பாக, தமிழக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக அஸ்ரா கர்க்கே நியமனம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றது முதல் அரசு அதிகாரிகள் பலரும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.







