சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு 1070 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400 -க்கும் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,23,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15ஆயிரத்துக்கும் சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியும் விலையும் காலையில் உயர்ந்து மாலையில் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வெள்ளி விலை 30ஆயிரம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.







