முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

முழு அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை: ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி முழுமையான அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறும் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் 19-வது ஆண்டு கலாச்சார விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவின் மூன்று நாட்களும் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், இதன் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், ஏனாம் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் ரங்கசாமி, புறக்கணித்து வருவதாகவும், தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது தொகுதியின் முக்கிய நிகழ்வில் கூட கலந்து கொள்ளாமல், அவர் மேற்கொண்டுள்ள இந்த போராட்டத்தில் உடல்நிலையில் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில் கலாச்சார நிகழ்வின் இறுதி விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, எங்களது அரசை பொறுத்தவரை மாநிலத்தின் எல்லா பகுதிகளும் முன்னேற்றம் பெற வேண்டும், ஒரே மாதிரியான சீரான வளர்ச்சியை காண வேண்டும் என்பதுதான். மத்திய அரசின் உதவியுடன் ஏனாம் பகுதியில் புதிய ஜிப்மர் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.அது விரைவில் திறக்கப்படும்.

11 மற்றும் 12 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் இலவச மிதிவண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகிறது.நிதி நெருக்கடி எப்படி இருந்தாலும் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கான திட்டங்களை அரசு தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது.ஏனாமில் புதிய ஆயுஷ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது.முதியவர்களுக்கான உதவித்தொகையையும் எங்களது அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

இதுதவிர புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுலாவிற்கு என்று போதுமான நிதியை ஒதுக்கி, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு அதிக நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வரிசையாக பட்டியலிட்ட முதலமைச்சர் ரங்கசாமி, எங்களது அரசு மீது சில குறைகள் இருக்கலாம். விரைவான செயல்பாடுகள் இல்லாமலும் இருந்திருக்கலாம். அதற்கு காரணம் முழுமையான அதிகாரம் உள்ள மாநிலமாக புதுச்சேரி இல்லை என்பதையும், சட்டமன்றங்களில் உறுப்பினர்கள் கூறும் கோரிக்கைளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்தும் மத்திய அரசின் உதவியுடன் அவ்வப்போது முக்கியமான திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எனமில் சூதாட்ட விடுதிகள் இருக்க கூடாது என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. எங்களது எண்ணமும் அதுதான். புதுச்சேரி மாநிலம் முழுவதும் சூதாட்ட விடுதி இருக்க கூடாது என்பது தான் அரசின் என்னம். இப்படிப்பட்ட நிலையில் ஏனாம் பிராந்தியத்தை அரசு புறக்கணிப்பதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரியை வளைச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிககி எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே உண்ணாவிரதம் இருந்துவரும் ஏனாம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டால் ஊதிய உயர்வு – சிக்கிம் அரசு அறிவிப்பு

Web Editor

முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் – ஆர்.எஸ்.பாரதி சவால்

Dinesh A

”அவளின் சுவாசம் நசுக்கி எறியப்பட்டது”… மனைவி மரணம் குறித்து அருண்ராஜா காமராஜ் உருக்கம்!

Vandhana