தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தமிழில் தொடங்கினார்.
2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டமன்ற வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் தமிழில் உரையை தொடங்கினார்.சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
ஆளுநரே வெளியேறு, வாழ்க, வாழ்க வாழ்கவே, தமிழ்நாடு, வாழ்கவே ” என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து காங்கிரஸ், விசிக, தவாக உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு பாமக கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வருகை தந்தனர்.