சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா இன்று டெல்லி சிபிஐ போஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரியது. இந்நிலையில், அதை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் மார்ச் 4ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அண்மைச் செய்தி: மாநில அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்நிலையில் தனது துணை முதலமைச்சர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்துள்ளார். மேலும் டெல்லி சிறையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர்களது பதவி விலகல் கடிதங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.