24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மணீஷ் சிசோடியாவை ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியா இன்று டெல்லி சிபிஐ போஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரியது. இந்நிலையில், அதை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் மார்ச் 4ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அண்மைச் செய்தி : டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ராஜினாமா

இந்நிலையில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  ஆனால் இந்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடுவது உள்ளிட்ட  வாய்ப்புகள் இருப்பதை  உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து வழக்கை திரும்ப பெறுவதாக சிசோடியா தரப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy