செந்தில் பாலாஜி உட்பட 4 புதிய அமைச்சர்கள் நியமனம்! நாளை மதியம் பதவியேற்கின்றனர்!

செந்தில் பாலாஜி உள்பட 4 புதிய அமைச்சர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து ராஜ்பவன் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்…

Appointment of 4 new ministers including Senthil Balaji - Tamil Nadu Governor approves!

செந்தில் பாலாஜி உள்பட 4 புதிய அமைச்சர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்பவன் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராகவும் மற்றும் தற்போதுள்ள இலாகாக்களுடன் கூடுதலாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையை ஒதுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். மேலும் வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பதவியேற்பு விழா 29.9.2024, ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை ராஜ்பவனில் நடைபெறும்.

மேலும், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன், ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்ததற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.