முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரை”- கே.பாலகிருஷ்ணன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் டிசைனுக்கான டெண்டர் கூட கொடுக்கப்படாத
நிலையில், அண்ணாமலை செல்லும் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரையாக தான் அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் “எங்கள் எய்ம்ஸ் எங்கே?” எனும் தலைப்பில் பழங்காநத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் தலைமை வகித்த இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சயின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ்கனி, திமுக எம்.எல்.ஏ தளபதி, மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் உள்ளிட்டோர் செங்கல்லை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் எய்ம்ஸ் மருத்துவமனை கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் செங்கலுடன் படுத்தவாறு வந்து பங்கேற்றார்.

இதனையடுத்து கூட்டத்தில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறும் போது கூட அவர்களால் கல்லூரியை கண்ணால் பார்க்க முடியாது. கண்ணால் பார்க்க முடியாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் ஒரே பிரதமர் மோடி தான். ஏன் பிரதமர் மோடி கூட படிக்காமலேயே பட்டம் பெற்றவர் தான். அது தொடர்பான வழக்கு கூட நிலுவையில் உள்ளது. படிக்காமலேயே பட்டம் வாங்கிய பிரதமரை போல் , கல்லூரியை பார்க்காமலேயே மாணவர்கள் பட்டம் வாங்கும் அவலத்தை மாற்றவே போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றி பேசினா்.அப்போது பேசிய அவர், “எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டிசைன் தயாரிப்பதற்கான டெண்டரே இன்னும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறாராம். அது பாதயாத்திரை அல்ல, மோடி அரசுக்கான இறுதி யாத்திரை. பாத யாத்திரையின் போது மதுரை பக்கம் வந்தால் எய்ம்ஸ் எங்கே என மக்கள் கேட்டால் அண்ணாமலை என்ன பதில் சொல்வார்?, மதுரையோடு அறிவிக்கப்பட்ட மற்ற மணிலா எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் கட்டி முடிக்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளன.

மதுரைக்குப்பின் 2 ஆண்டுகள் கழித்து இமாச்சல் பிரதேசத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் த்தில் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா நடத்த இருக்கிறது. ஆனால் தமிழகம் உங்களுக்கு என்ன துரோகம் செய்தது, தமிழ்நாட்டு மக்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்க வில்லை.பணமில்லை என்பது காரணமல்ல,தெரிந்தே நம்மை பழிவாங்குகின்றனர். வேண்டுமென்றே எய்ம்ஸ் திட்டத்தை மத்திய பாஜக அரசு கிடப்பில் போட்டிருக்கிறது.துரோகம் இழைக்கும் மத்திய பாஜக அரசு வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தூக்கி எறியப்படவுள்ளது.

கவர்னர் தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கிறார். பிரதமர் தமிழ்நாட்டையே அழிக்க நினைக்கிறார். தமிழ்நாட்டை யாராவது சீண்டிப்பார்த்தால், அவரை அடித்து அணிபணிய வைப்போம் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கவர்னர்” . மத்தியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி மீண்டும் வரப்போகிறது. மகத்தான எதிர்காலம் உருவாகப் போகிறது. அப்போது எய்ம்ஸ் திட்டத்தோடு, சேது சமுத்திர திட்டமும் சேர்ந்து நிறைவேற்றப்படும். பாஜக கூட்டணியை ஓட ஓட விரட்டும் நாள் நெருங்கி விட்டது என்று மத்திய அரசை தாக்கி கே.பாலகிருஷ்ணன் கடுமையாக பேசியிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேலூர் பிரபல நகைக் கடையில் கொள்ளை: நகைகளை மீட்ட போலீஸ்

Arivazhagan Chinnasamy

வானவில் மன்றத்தின் நோக்கம் என்ன?

Web Editor

காணாமல் போன வேட்பாளர் மயங்கி நிலையில் மீட்பு!