உலக அளவில் பெருநிறுவனங்கள் அடுத்தடுத்து பணி நீக்கத்தை அறிவித்துள்ள நிலையில் சொமேட்டோ நிறுவனம் 800 பேருக்கு வேலை வாய்ப்பு குறித்து அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார அறிஞர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.சமீபகாலமாக உலக அளவில் செயல்படக்கூடிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்தடுத்து வேலை இழப்பை அறிவித்து பணியாளார்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் 5% சதவீத ஊழியர்களை அதாவது 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. மேலும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் 12,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.
இந்த நிலையில் இந்திய நிறுவனங்களும் தொடர்ந்து பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக ஷேர்சாட் மற்றும் மோஜ் ஆகிய செயலிகளை நடத்திவரும் இந்திய நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் 20% பேரை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த வாரத்தில் சமூக வலைதல பொழுதுபோக்கு நிறுவனமான ஷேர் சாட் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. தற்போது ஸ்பாட்டிபை நிறுவனம் பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மியூசிக் ஸ்டீரிமிங் நிறுவனமான ஸ்பாட்டிபை 600 நபர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
உலக பெரு நிறுவனங்கள் அனைத்தும் பணி நீக்கம் அறிவித்துள்ள நிலையில் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ 800 நபர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உணவு டெலிவரியில் இந்தியாவில் முன்னணியில் செயல்படக் கூடிய நிறுவனம் சொமேட்டோ. இதன் சிஇஓ வான பஞ்சாபைச் சார்ந்த தீபிந்தர் கோயல் வேலை வாய்ப்பு குறித்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள் மற்றும் மேலாளர்களை மற்றும் சிஇஓ விற்கான முதன்மை செயலர் உள்ளிட்ட பணிகளுக்காக சொமேட்டோஅழைப்பு விடுப்பதாகவும், விருப்பம் இருப்போர் தனது மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என
( deepinder@zomato.com ) திப்பெந்தர் கோயல் தனது மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்துள்ளார்.
சொமேட்டோ நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது ஐக்கிய அரபு நாடுகளான நாடுகள், கத்தார், இலங்கை , இந்தோனேசியா உள்ளிட்ட 24 நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் பணி நீக்கத்தை அறிவித்துள்ள நிலையில் சொமேட்டோ நிறுவனத்தின் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு பாராட்டுக்களை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.