முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

போலீஸை தாக்க முயன்ற போதை இளைஞர்; மறித்த தாய், தந்தையையும் தாக்கினார்

காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற வாலிபரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்திய சில இளைஞர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டு அந்த பகுதிவழியாக சென்றவர்களிடம் வாக்குவாதம் செய்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர், குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் சென்ற போதை வாலிபர் ஒருவர் புகார் அளிக்க சென்றவரை அங்கிருந்து விரட்டியடித்ததோடு காவல் நிலையத்தில் இருந்த காவலர்களையும் தாக்க முயன்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காவலர்கள் காவல் நிலையத்திற்குள் இருந்து வெளியேறிய நிலையில் அந்த வாலிபரை அங்கு திரண்ட சில இளைஞர்கள் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் அடம் பிடித்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த அவரது தாய் மற்றும் தந்தை அவரை அழைத்து செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அந்த வாலிபர் தனது தந்தையையும் தாயையும் காலால் மிதித்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தந்தை மகனை காலணிகளை கழற்றி அடிக்க தொடங்கிய நிலையில் தந்தையும் மகனும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு வந்த சிலர் உதவியுடன் பெற்றோர்கள் அந்த போதை வாலிபரை காவல் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து அழைத்து சென்றனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் மிடாலம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. தாக்குதலில் காயமடைந்த நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், போதை வாலிபர் காவல் நிலையத்திற்குள் வைத்து பெற்றோரை சரமாரியாக தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தேவை-எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Web Editor

வழிபாடு தாய் மொழியில் தான் இருக்க வேண்டும்: சீமான்

EZHILARASAN D

செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்றவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

Web Editor