முக்கியச் செய்திகள் தமிழகம் வணிகம்

கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடு

கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் கிராம்பு அதிகம் பயிரிடப் படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திர கிரி பகுதிகளில் சுமார் 760 ஹெக்டேர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள கிராம்பு மரத்தின் மொட்டுகள், உதிர்ந்த இலைகள், தண்டுகள் வாசனை எண்ணெய் தயா ரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில், கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்பு, தரத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இதற்கு `கன்னியாகுமரி கிராம்பு` என புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கூறும்போது, `இந்தியாவில் கிராம்பின் மொத்த உற்பத்தி 1,100 மெட்ரிக் டன். இதில், 1,000 மெட்ரிக் டன் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 750 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடியாகும் கிராம்பில், யூஜினால் அசிடேட் என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதால், வாசனை எண்ணெய் அதிகம் கிடைக்கிறது.

இந்தத் தனித்தன்மைக்காக, கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தரமான கிராம்பு கிடைப் பது உறுதி செய்யப்படுகிறது” என்றார். கன்னியாகுமரி கிராம்பு புவிசார் குறியீடை பெற்றிருப்பதை அடுத்து மலைத்தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு அறிவிப்பு!

Gayathri Venkatesan

செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள்… கொடியேற்றியதால் பரபரப்பு!

Saravana

“வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்..” – சத்யபிரதா சாகு

Jayapriya