ஆர்கே நகர் காவல் நிலையம் எதிரே உள்ள மதுபான கடையில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு.
கேரளா மாநிலத்தை சேர்ந்த பாபு என்பவர் சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் விரைவு சாலை சந்திப்பில் உள்ள மதுபான கடை ஒன்றில் கடந்த 45 நாட்களாக வேலை செய்து வந்திருக்கிறார். இவர், மதுபான கடையின் மாடியில் உள்ள பாரில் உள்ள ஓர் அறையில் தங்கி இருந்து வேலை செய்து வந்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று இரவில் ஊனமுற்ற மர்ம நபர் ஒருவர் மதுபான கடையின் பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி என்பவரிடம் தனக்கு வேலை வேண்டும் என்று கேட்டதாகவும் அதனைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்தி ஊனமுற்ற நபரை சம்பவம் நடந்த பாரின் மாடியில் பாபு உடன் இரவில் தங்கி கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். மேலும், காலையில் வேலை போட்டு தருவதாகவும் அவர் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மர்மநபர் காலையில் பாரை பூட்டிவிட்டு சாவியை கீழே உள்ள பக்கத்து கடைக்காரரிடம் கொடுத்து விட்டு சென்றதாகவும் கடையில் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் இன்று மதியம் பாரை திறந்து பார்க்கும் பொழுது பாபு என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் உடம்பில் ரத்த காயங்கள் இருந்ததாகவும் உடனடியாக ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் ஆர்கே நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு மதுபான கடை பொறுப்பாளர் மற்றும் பார் உரிமையாளர் என பலரையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையம் எதிரே உள்ள மதுபான கடையில் வேலை பார்க்கும் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் மேலும் வெகுநேரமாக யாரும் கவனிக்காமல் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.