காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து, அந்தப் பள்ளியில் படித்துவந்த மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்தப் பள்ளிக் கூடத்தில் சுமார் 1,500 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உத்தரமேரூர் மட்டுமல்லாமல், அதற்கு அருகில் உள்ள சிறிய கிராமங்களில் இருந்து மாணவிகள் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமையான பள்ளிக் கட்டிடங்களில் பள்ளி வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து மாணவிகள் வீட்டுக்கு கிளம்பும் சமயத்தில் அந்தப் பள்ளியின் ஒரு பகுதியில் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது.
இதை சற்றும் எதிர்பாராத மாணவிகள் அதிர்ச்சியில் அடைந்தனர். பின்னர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் அந்த இடத்தைச் சுற்றி இருக்கைகளை அடிக்கி மாணவிகள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.
இதனிடையே, பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பள்ளியின் பழமையான கட்டிடங்களை இடிப்பதற்கான உத்தரவு வந்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.