அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தது போல இப்போது அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பழனியப்பன்…

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தது போல இப்போது அதிமுகவை டிடிவி தினகரன் மீட்பார் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பழனியப்பன் ஒசஹள்ளி புதுப்பட்டி காலனி, புதுப்பட்டி, மணியம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது கிராம மக்களிடம் பேசிய பழனியப்பன், தொகுதி மக்களிடம் தனக்கு ஒரு இணக்கமான தொடர்பு உள்ளதாக கூறினார். தொகுதி மக்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜெயலலிதா சேவல் சின்னத்தில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டு ஒருங்கிணைத்தார் அதேபோல் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு கட்சியை கைப்பற்றுவார் என்றும் பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.