அதிமுக வேட்பாளர் யூனியன் எஸ் வீரமணிக்கு ஆதரவாக திருவிடைமருதூர் அருகே திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் யூனியன் எஸ் வீரமணிக்கு ஆதரவாக திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், விவசாய குடும்பத்தில் பிறந்த தமிழக முதல்வர் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறப்பான முறையில் ஆட்சி செய்வதாக குறிப்பிட்டார்.
அதிமுக அரசு சொன்னதை தான் செய்யும் செய்வதை தான் சொல்லும் என்பதற்கேற்ப செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மகளிருக்கு 1,500 ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் ஆறு சிலிண்டர் இலவசம் போன்ற திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கஞ்சா கருப்பு உறுதிபடத் தெரிவித்தார்.







