கொரோனா காலத்தில் கூட இரண்டு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அதிமுக அரசு வழங்கியதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் செல்லூர் ராஜூ பேசுகையில், பத்தாண்டுகளாக அமைச்சராக இருந்த, தாம் பல்வேறு திட்டப் பணிகளை மதுரை மாநகரருக்குய் கொண்டு வந்திருப்பதாக கூறினார். மேலும் கொரோனா காலத்தில் இரண்டு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அதிமுக அரசு வழங்கியதாக தெரிவித்தார்.
பரவை பேரூராட்சிக்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மதுரை மாநகரை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.







