திருப்பூர் வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் மீட்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் சிலை கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கு சென்ற துப்புரவு பணியாளர்கள் சாக்கடையில் இருந்த சிலையை எடுத்து தூய்மை படுத்தினர். அப்பொழுது அச்சிலை சுமார் 3 அடி உயரம் கொண்ட ஐம்பொன் கிருஷ்ணர் சிலை என்று தெரிய வந்தது.
இதனையும் படியுங்கள் : அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்
இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக சிலையை மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருமுருகன் பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் என்னும் குழந்தைகள் காப்பகத்தில், உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில் காப்பகம் வருவாய் துறை அதிகாரிகளால் மூடப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அங்கிருந்து சிலைகள் திருடப்பட்டதாக காப்பக நிர்வாகி கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். தற்போது திருடப்பட்ட சிலை கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது. இதன் பின்னர் இந்த சிலை காப்பகத்திலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை என்பது உறுதி செய்யப்பட்டது.
அண்மைச் செய்தி: சிறைகளில் சலவை இயந்திரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்
சிலையை யாரோ திருடிய நிலையில் காவல்துறையினருக்கு பயந்து இதனை சாக்கடையில் வீசி விட்டு சென்றார்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-கோ. சிவசங்கரன்
குழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: