ஒசூரில் பேட்டரி தொழிற்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறுக்கி என்னும் கிராமத்தில் லுமினாஸ் என்னும் பேட்டரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் லூமினேஷ் பேட்டரி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எதிரே இருக்கும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேமிப்பு கிடங்குகள் திடீரென தீ பற்றி மள மளவென எரிய தொடங்கியது.
தீ அதிகமான நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், சூளகிரி
போலிசாருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் ஓசூரில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
இதனையும் படியுங்கள்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா
கழிவு கிடங்கு என்பதாலும் மற்றும் வெயிலின் தாக்கத்தினாலும் தீயானது மள மளவென பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காணப்பட்டது. மேலும் அருகருகே உள்ள தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தீ பற்றியதில் பெரும் விபத்து எதுவும் ஏற்படவில்லை

இதனையும் படியுங்கள் : அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
–எம்.ஸ்ரீமரகதம்







