மிக பிரபலமான தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை ஆறு சீசன்கள் நடைபெற்றுள்ள டிஎன்பிஎல் தொடரில் ஏழாவது சீசன் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் வழக்கம்போல் 8 அணிகள் களமாடுகின்றன. இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு டிஎன்பிஎல் போட்டியில் முதன்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 8 அணிகளுக்கும் தலா ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 942 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் நாளான நேற்று பல நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். விஜய் சங்கரை 10.25 லட்சம் ரூபாய்க்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. வாஷிங்டன் சுந்தரை 6.75 லட்ச ரூபாய்க்கு மதுரை பாந்தர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது.திருப்பூர் தமிழன்ஸ் அணி சாய் கிஷோரை 13 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சாய் சுதர்சனை 21.60 லட்ச ரூபாய்க்கு லைகா கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அண்மைச் செய்தி: அரசு அலுவலகங்களில் ’தமிழ் வாழ்க’ என பலகை மட்டுமே உள்ளது; தமிழ்தான் இல்லை – ராமதாஸ் பேச்சு
இன்றைய ஏலத்தில் குரூப் டி பிரிவில் மொத்தம் 22 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். கிரன் ஆகாஷ் 6.50 லட்ச ரூபாய்க்கு கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. முகிலேஷ் 6 லட்ச ரூபாய்க்கு கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. குரூப் டி பிரிவில் மொத்தம் 22 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு தேர்வான டாப் 10 வீரர்கள்
- சாய் சுதர்சன் (லைகா கோவை கிங்ஸ்) – ரூ.21.6 லட்சம்
- சஞ்சய் யாதவ் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) – ரூ.17.6 லட்சம்
- ஷிவம் சிங் (திண்டுக்கல் டிராகன்ஸ்) – ரூ.15.95 லட்சம்
- சோனு யாதவ் (நெல்லை ராயல் கிங்ஸ்) – ரூ.15.2 லட்சம்
- அபிஷேக் தன்வர் (சேலம் ஸ்பார்டன்ஸ்) – ரூ.13.2 லட்சம்
- சாய் கிஷோர் (திருப்பூர் தமிழன்ஸ்) – ரூ.13 லட்சம்
- ஹரிஷ் குமார் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) – ரூ.12.90 லட்சம்
- ஹரி நிஷாந்த் (மதுரை பாந்தர்ஸ்) – ரூ.12.20 லட்சம்
- அருண் கார்த்திக் (நெல்லை ராயல் கிங்ஸ்) – ரூ.12 லட்சம்
- சுவப்னில் சிங் (மதுரை பாந்தர்ஸ்) – ரூ.12 லட்சம்
இரண்டு நாட்கள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் அதிகபட்ச தொகைக்கு சாய் சுதர்சன் தேர்வாகியுள்ளார். சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் ஏலத்தில் அவரை குஜராத் அணி ரூ.20 லட்சம் என்ற அடிப்படை தொகையில் ஏலத்தில் எடுத்தது. தற்போது ஐபிஎல் தொடரை விட அதிக தொகைக்கு டிஎன்பிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.