திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 10 வேட்பாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்புபனுக்கள் பரிசீலனை நேற்று நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய உரிய இடங்கள், எவையெல்லாம் இந்த நகர்ப்புற உள்ளாட்சியில் பின்பற்றி நடக்கவேண்டும் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 14,324 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற்ற வேட்பளர்களை கட்சியிலிருந்து அதிமுக நீக்கியுள்ளது.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/DsAFMv48dU
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) February 8, 2022
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற ஏதுவாக, தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்ற அதிமுக வேட்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடும் நெல்லை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 வேட்பாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், அதிமுக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் வலியுறுத்தியுள்ளனர்.







