காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் நியமனம்…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்றக் கட்சி தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அதில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இதற்கிடையில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க தமிழ் நாடு காங்கிரஸ் ஆதரவளித்தது. இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் நிர்வாகிகளை நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரான கிள்ளியூர் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல துணைத் தலைவராக குளச்சல் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட்டும், தலைமை கொறடாவாக மேலுர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதனும் நியமிக்கப்படுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.