ஹிஜாப் விவகாரம்: சென்னையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்பாட்டம்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை கண்டித்து சென்னையில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை…

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை கண்டித்து சென்னையில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய மாணவிகள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், இஸ்லாமிய மாணவிகளுக்குப் போட்டியாக இந்து மாணவர்களும், மாணவிகளும் காவித் துண்டு அணிந்து பள்ளிக்கு வர முயன்றனர்.
இந்த விவகாரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியதை அடுத்து, இரு தரப்பினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகல்கோட், தவனகிரி, உடுப்பி உள்ளிட்ட
பகுதிகளில், போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த விவகாரம் பூதாகரமாகும் இந்நிலையில் பல தரப்பினரும் இதற்கான கண்டனஙக்ளையும், இதற்கான போராட்டாங்களையும் ஆங்காங்கே நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை அண்ணா சாலையில் தாராப்பூர் டவர் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கார்நாடக பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச்
செயலாளர் அப்துல் கரீம், அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று கூறப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வர அனுமதி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது. மேலும் இன்றும் இது குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.