தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். தொடர்ந்து இன்றைய தினம், தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரின் இல்லங்களுக்கு நேரில் சென்றார். அந்த தலைவர்களும் தங்கள் வீட்டிற்கு வந்த முதலமைச்சரை வரவேற்று, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து, முதலமைச்சர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு சென்றார். அங்கே வீட்டின் வாசலில் காத்திருந்த சீமான், முதலமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி சீமான் வரவேற்றார். பின்னர் முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து. சால்வை அணிவித்த சீமான், அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசளித்தார். விஜய்யும் சீமானுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.







