தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் மரியாதை பலவேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். முதலாவதாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய், மதிமுக நிறுவனர் வைகோவை அவரது அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்தார்.
மு.க. ஸ்டாலின், வைகோ ஆகியோரைத் தொடர்ந்து தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு ஈ.சி.ஆர் சாலை அக்கரையில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்றது.
மேலும் அன்புமணியின் மனைவியும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான சௌமியா அன்புமணியும் உடனிருந்தனர். மேலும் பாமக தலைவர் அன்புமணியின் குடும்பத்தினரையும் முதலமைச்சர் விஜய், சந்தித்தார்.




