நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்! 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!

டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு…

டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

ஆப்கன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து 114 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இக்ரம் அலிகில் 58 ரன்கள் எடுத்தார். இப்ராஹிம் ஸத்ரான் 28 ரன்கள், ரஷித் கான் 23 ரன்கள், முஜீப் உர் ரஹ்மான் 28 ரன்கள் எடுத்திருந்தார்.

285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 66 ரன்கள் எடுத்திருந்தார். 40 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 215 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது. இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. முஜீப் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். மொஹம்மது நபி 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். நவீன் மற்றும் ஃபஸல்ஹக் ஃபரூக்கி தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.