உலக கோப்பை கிரிக்கெட் 2023: பெரிய அணிகளுக்கு வார்னிங் கொடுக்கிறதா ஆப்கன்?…

உலகக் கோப்பையில் அப்செட்டுகளை கொடுக்கத் தவறாத இங்கிலாந்து: அயர்லாந்து, வங்கதேசம் வரிசையில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி அற்புதம் நிகழ்த்திய ஆப்கன் – பெரிய அணிகளுக்கு வார்னிங் கொடுக்கிறதா ஆப்கன்? இந்தியா, பாகிஸ்தான் பிரமாண்டம் ஓய்ந்து…

உலகக் கோப்பையில் அப்செட்டுகளை கொடுக்கத் தவறாத இங்கிலாந்து: அயர்லாந்து, வங்கதேசம் வரிசையில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி அற்புதம் நிகழ்த்திய ஆப்கன் – பெரிய அணிகளுக்கு வார்னிங் கொடுக்கிறதா ஆப்கன்?

இந்தியா, பாகிஸ்தான் பிரமாண்டம் ஓய்ந்து விடிந்த மறுநாளே நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான ஆட்டத்திற்கு உதயமானது சூரியன் மட்டுமா? இல்லை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தான். ஒரிஜினலாக சொல்ல வேண்டும் என்றால், ஆசிய நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு பிறகு நல்ல சுழற்பந்து யூனிட் வைத்திருப்பவர்களில் ஆப்கானிஸ்தான் அணியும் ஒன்று. அப்பாட்டக்கர் இந்தியாவை சந்திப்பதற்கு முன்பு ஆப்கன் கேப்டன், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி – ”நாங்கள் இந்தியாவை விட நல்ல ஸ்பின் யூனிட்டை வைத்திருக்கிறோம் என சொல்லுகிறார் என்றால், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி எல்லாம் அவர் எம்மாத்திரம் என நினைத்திருக்கக் கூடும் என தோன்றுகிறது தான்.

போட்டி நடக்கும் மைதானத்தை பொறுத்தவரை பிலாட் பிட்ச் தான். பந்துவீச்சுக்கு நினைத்துப் பார்த்ததை விட இரு அணிகளுக்கும் உயிரூட்டம் இருக்காது என்று சமீபமாக நடைபெற்று முடிந்த போட்டிகள் ஸ்கோர்கள் பார்த்தாலே தெரியும். அப்படி இருக்கும் போது பக்கா பேட்டிங் விக்கெட் என்ற தைரியத்துடன் களமிறங்கிய இரு அணிகளும் என்ன நினைத்து களமிறங்கியதோ, ஆனால் ரசிகர்கள் நினைப்பு எல்லாம் இன்னொரு அப்செட் தான். அப்செட் என்றாலே நினைக்கத் தோன்றுவது எல்லாம் இதுவரை உலகக் கோப்பை தொடர்களில் பெரிய அணிகளாக நாம் கருதும் டாப் கிளாஸ் அணிகளை, வளர்ந்து வரும் அணிகள் வீழ்த்தும் அப்செட் தான்.

கிரிக்கெட் ஒரு அற்புதமான விளையாட்டு, ஒவ்வொரு தினமும் அன்றைய பொழுதில் நிகழும் மிரக்கில்களை சார்ந்தது. அப்படித்தான் டெல்லி மைதானத்தில் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து ஆப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்த இங்கிலாந்துக்கு அப்செட் கொடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. முதலில் நியூசிலாந்து அணியிடம் மறக்கப் பட வேண்டிய ஒரு தோல்வி, அதற்கு பிறகு வங்காளதேசத்துடன் மறக்கப்பட முடியாத ஒரு வெற்றி என இரண்டிலும் இரு வேறு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டி இருந்தது இங்கிலாந்து அணி. ஆனால் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இப்படி ஒரு தோல்வியை சிந்தித்துப் பார்க்கவில்லை.

இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தோல்விகள் அவ்வளவு புதிதல்ல. ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை பொறுத்தவரை ஏற்கனவே 1992 இல் அல்புரியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, 2011 இல் பெங்களூருவில் அயர்லாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி, அதே 2011 ஆம் ஆண்டு சிட்டகாங்கில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2015 உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டில் நடந்த போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்திலும் வங்கதேசத்திற்கு எதிராக அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்திருக்கிறது இங்கிலாந்து அணி.

இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் மூத்த வீரர்களை கொண்டும், அனுபவமான வீரர்களை கொண்டும் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அப்படி என்ன தவறு செய்தது? இந்த தோல்விக்கு இங்கிலாந்தின் சீரற்ற பங்களிப்பு மட்டுமே காரணம் சொல்லி விட முடியாது அல்லவா, இங்கே அந்த கிரெடிட் ஐ கொஞ்சம் ஆப்கன் வீரர்களுக்கு கொடுத்து விடுங்கள். உன்மையில் நினைத்ததை விட புத்துணர்ச்சியுடன் தான் விளையாடி இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி.

முதலில் பேட்டிங் செய்ய அழைத்த போது இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரின் எண்ணம் முழுக்க, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் மற்றும் ரீஸ் டோப்லியை வைத்து ஆப்கானின் டாப் ஆர்டரை முடித்து விடலாம் என்பதும், ஆதில் ரஷீத் மற்றும் லிவிங்ஸ்டனை வைத்து மீதம் இருக்கும் விக்கெட்டுகளுக்கு தொந்தரவு கொடுத்து விட்டால், ஒரு 200 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்து விட்டு அவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ளலாம் என்ற பிளானில் தான் இருந்திருக்கக் கூடும்.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடியான தொடக்கம் இங்கிலாந்தின் திட்டங்களை ஸ்டோர் செய்து வைத்திருந்த ஜோஸ் பட்லர் எனும் ஸ்டோரேஜில் ஹேக்கர்கள் புகுந்தது போல எதிர்பக்கம் ரியாக்‌ஷனாக மாறி விட்டது. அப்படியாக இருந்தது ஆப்கானிஸ்தானின் முதல் விக்கெட்டுகான பார்ட்னர்ஷிப். அந்த அணியின் சென்ஷேசன் பேட்டராக இருக்கக் கூடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் பவர்பிளே ஓவர்களை நாலாப்பக்கமும் தெறிக்க விட்டார். அவருடன் சப்போர்டிங் கேரக்டராக நின்று கொண்டிருந்த இப்ராஹிம் ஜார்டன் அடித்த 28 ரன்கள் ஆப்கனுக்கு உதவிகரமாக இருந்தது.

அனல் பறக்கும் வேகத்தில் மார்க் வுட், ரிதம் செட் ஆனாலும் வெரைட்டி காட்டாத ரீஸ் டோப்லி, முடிந்தவரை முயற்சி செய்த கிறிஸ் வோக்ஸ் என யார் முயன்றாலும் அசராத ரஹ்மானுல்லா குர்பாஸ் தனது இண்டெண்டில் அதீத தெளிவாக இருந்தார். 16.4 ஓவர்களில் தனது பார்ட்னர் இப்ராஹிம் ஜார்டன் உடன் சேர்த்து வைத்திருந்த 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் உடைந்தாலும், தனது அதிரடியை தொடர்ந்தார் குர்பாஸ். ஆனால் தனது பார்ட்னர் விக்கெட்டை இழந்த மறு கனமே 18.5 ஒவர்களுக்குள் இங்கிலாந்து அணி கம்பேக் கொடுத்து 122 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை தன்னகப்படுத்தியது.

எதிர்பார்த்த பங்களிப்பை கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பூர்த்தி செய்யாவிட்டாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தாலும் இங்கிலாந்தின் தாக்குதல்களை தனது கான்பிடண்ட் ஆன பேட்டிங் திறனால் நிதானமாக ஆடிய வாரே 66 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார் இக்ரம் அலிகில். அந்த உயிரூட்டமில்லாத பிட்சில் அற்புதம் நிகழ்த்திய மார்க் வுட் இங்கிலாந்தின் கீ பவுலராக இருக்க, ரீச் டோப்லே, ஆதில் ரஷீத் என ஒவ்வொருவரும் பேக் டூ பார்மாக தான் திகழ்ந்தார்கள். ரஷித் கான், முஜீப் என இருவரும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை ரன்களாக மாற்ற, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான்.

எக்ஸ்க்யூஸ் இல்லாத இங்கிலாந்தின் சுமாரான பந்துவீச்சு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பிரமாதத்தை நிகழ்த்தாத நிலையில் 284 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான். ரசிகர்களின் கியூரியாசிட்டிக்கு தீனி போடும் விதம் எல்லோரும் எதிர்பார்த்த அனைத்தும், ஆப்கானின் பந்துவீச்சில் இங்கிலாந்துக்கு மேலும் ஒரு அப்செட் மட்டுமே. டெல்லி மைதானத்தில் இரு அணிகளுக்கும் சம அளவில் ரசிகர் பட்டாலம் இருந்ததால் எக்கச்சக்க எமோஷன்களை பார்க்க நேர்ந்தது.

முன்னதாக 2011 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, பெங்களூருவில் அயர்லாந்து அணியுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்த போது இங்கிலாந்து அணியின் இலக்கு 328 ஆக இருந்த போது, அயர்லாந்து வீரர் கெவின் ஓப்ரெயினின் 63 பந்துகளில் 113 ரன்கள் சதம் அயர்லாந்துக்கு அசத்தலான வெற்றியை தேடி கொடுத்தது. மேலும் அதுவே அப்போதைய அதிவேகமான சதமாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் சேசிங்கை கட்டுக்குள் கொண்டு வர நினைத்த இங்கிலாந்து அயர்லாந்தை அடிக்க விட்டிருந்தாலும், இன்றைய போட்டியின் எதிர் சுவாரஸ்யமே இங்கிலாந்து அணியால் ஆப்கன் நிர்னயித்த 285 ரன்கள் இலக்கை சேஸ் செய்திட முடியவில்லை என்பது தான்.

285 ரன்கள் என்ற இலக்கை எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது என்று களமிறங்கிய ஜாஸ் பட்லர் அண்ட் கோ, ஆப்கானின் சுழற்பந்து கூட்டணியை நினைத்து துளி அளவும் பயந்திருக்க கூடுமா என கேட்டால், ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. வேகத்தை நினைத்து வருத்தம் கொள்ள வேண்டிய அவசியமில்லை, வேர்ல்ட் கிளாஸ் பேட்டர்களை கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு அச்சமே ஆப்கானின் ஸ்பின் யூனிட் தான். மின்னொளியூட்டப்பட்ட டெல்லி மைதானத்தில் டியூ ஒரு புறம் இருந்தாலும், அண்டர் தி லைட் பந்தில் நல்ல ஸ்விங் கிடைத்தது. இங்கிலாந்துக்கு கூட இப்படி கிடைத்துவிடவில்லை.

அந்த அணியின் மகத்துவமான பாஸ்ட் பவுலர் ஃபசல் ஃபரூக்கி ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டை, இங்கிலாந்து அணி இன்னிங்சை தொடங்கி 3 ரன்கள் எடுத்திருந்த போதே வீழ்த்த, அங்கிருந்தே திணற ஆரம்பித்தது இங்கிலாந்து. மிரட்டல் பலம் கொண்ட டேவிட் மலான் நம்பிக்கையை கொடுக்க தொடங்கிய நேரமும் இதுதான். என்னதான் ஆப்கன் வளர்ந்து வரும் அணியாக இருந்தாலும், அவர்களது சீக்ரெட் சாஸ் எப்போதும் ஸ்பின்னில் பிரதிபலிக்க தவறியது கிடையாது. இந்தியாவுடன் செய்த தவறுகளை எல்லாம் திருத்த நினைத்த ஆப்கானிஸ்தான், ஒவ்வொன்றையும் நினைவில் வைத்து இங்கிலாந்துக்கு பந்துவீசியது.

இரண்டாவது பெரிய விக்கெட்டாக ஜோ ரூட்டை, முஜீப் கணிக்க முடியாத பந்தை வீசி போல்ட் ஆக்க, அதே நேரம் அதிரடி காட்டிக்கொண்டிருந்த டேவிட் மலான் 32 ரன்களுக்கு முகமது நபி பந்தில், இப்ராஹிம் ஜார்டனிண்டம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அனுபவமான அணியான இங்கிலாந்து அடுத்தடுத்து இருக்கும் பேட்டர்களை வைத்து ஆப்கன் பந்துவீச்சை சமாளித்து விடும் என நினைத்த அந்த அணிக்கு அங்கிருந்து ஒவ்வொரு ஸ்பின்னரும் தொந்தரவு கொடுக்க, அடுத்தடுத்து கொத்துக் கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் நம்பிக்கைக்கு கடைசிவரை தொய்வின்றி உழைத்தது ஹாரி புரூக் மட்டும்தான்.

ஹாரி புரூக் நல்ல அதிரடி ஆட்டக்காரர் என்றாலும், அவருடனான பார்ட்னர்ஷிப் புக்கு இன்னொரு பேட்டர் நின்றாக வேண்டிய சூழல் நிலவிய போதிலும், ஒவ்வொருத்தராக கிள்ளி எறிந்த ஆப்கானின் நம்பிக்கையான முஜீப், ஒருவழியாக வெற்றியை எட்டக்கூடிய இலக்கிற்கு அணியை நெருங்கச் செய்து விட்டார். ஜோஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் என மின்னல் வேகத்தில் வெளியேறிய இங்கிலாந்து அணியின் லோயர் ஆர்டருக்கு அடுத்து, மார்க் வுட் மற்றும் ஆதில் ரஷீத்தின் கடைசி கட்ட பார்ட்னர்ஷிப் இறுதிக்கட்ட நம்பிக்கையை கொடுத்தது.

அங்கிருந்து அதிரடி காட்டிய ஆதில் ரஷீத் மற்றும் மார்க் வுட் கூட்டணியை அட்டாக் செய்ய கொண்டுவரப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஃபரூக்கியை கூட அடித்து ஆடி வந்தது வுட், ரஷீத் கூட்டணி. 72 பந்துகளில் 89 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், தனது 9 வது ஓவரை வீச வந்த ரஷித் கான், தனது மொத்த அனுபவத்தையும், முகமது நபி இடையேயான பேச்சு வார்த்தைக்கு பிறகு வெளிப்படுத்திய போது அந்த பேச்சு வார்த்தையும் ரஷித் கானுக்கு விக்கெட்டை கொடுத்தது. ஆம் ர்ஷீத்தை ரஷித் கான் வீழ்த்த, இங்கிலாந்துக்கு நம்பிக்கை பறிபோன தருணமாக அதை போட்டோ எடுத்து மாட்டிக் கொள்ளலாம் என்றாகி விட்டது.

அவ்வளவுதான் முடிந்தது ஜோலி… மார்க் வுட்டின் பின்புறம் இருந்த ஸ்டம்புகள் ரஷித் கான் வீசிய பந்தில் தெறிக்க, உறுதியானது ஆப்கானிஸ்தானின் வெற்றி. முஜீப் மற்றும் ரஷித் கான் மிஸ்டரிகளை பொறுத்துக்கொள்ள முடியாத இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஒரு வழியாக அப்செட்டுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, இந்த உலகக் கோப்பையில் ஆப்கானின் பெரியதொரு அப்செட்டை சந்தித்ததுடன், இதையும் வரலாறாக்கியது.  ஆப்கன் அணியோ இந்த கான்பிடன்ட் வெற்றியை கொண்டாடி தீர்த்தது, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் அணியை இந்த உலகக் கோப்பை தொடரில் அடுத்து சந்திக்கப் போகும் பெரிய அணிகளின் ஹார்ட் பீட்டுகளை எகிற செய்திருக்கிறது, ஆப்கானின் அடுத்தடுத்த போட்டிகளை உற்றுநோக்கச் செய்திருக்கிறது. அதே சமயம் இங்கிலாந்து அணியை முற்றிலும் மட்டம் தட்டி விடுவது கிரிக்கெட்டில் நிரந்தரம் கிடையாது. இந்த தோல்வி, இங்கிலாந்து அணியை மேலும் விழிக்கச் செய்திருக்கக்கூடும். அதுமட்டுமின்றி, அடுத்தடுத்த போட்டிகளில் ஒளித்து வைத்திருக்கப்படும் பென் ஸ்டோக்ஸ் எனும் பேக்கப் யூபிஎஸ் ஐ உள்ளே எடுத்து வர செய்து பாஸ்பால் கிரிக்கெட்டை முன்னெடுக்க செய்யுமா என்பதை இங்கிலாந்து, என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆகமொத்தம் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி கூறியதை உங்களாலும் உணர முடியும் என்று நம்புகிறேன்; “இது மிகப்பெரிய வெற்றி, இந்த வெற்றியை எங்கள் நாடே கொண்டாடும். 2015 க்கு பிறகு எங்களுக்கு கிடைத்த வெற்றியும் இதுவே, மேலும் இதோடு எங்கள் வெற்றிப்பயணம் நின்று விடாது!” உணர்ந்திருப்பீர்கள் எனில் நீங்கள் கிரிக்கெட்டை காதலிப்பவர்களே.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.