ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு கொடூர நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய பகுதியான காபூலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 47 பேர் படுகாயமடைந்தனர். காவல் துறையினரை குறிவைத்து நடந்த இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அப்பாவி மக்கள் மீதான இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.







