முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி நடிகர் நடிகைகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.

இன்று காலையில் நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினியுடன் சென்னை, திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குச்செலுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடியிலும், நடிகர் கமல் ஹாசன் அவரது மகள்களுடன் ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் விஜய் சேதுபதி அவரது மனைவியுடன் வாக்களித்தார்.

நடிகை மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளரான நடிகை குஷ்பு மந்தவெளி தொகுதியில் வாக்களித்தார். நடிகர்கள் அர்ஜூன், ஜெயம்ரவி மற்றும் ஜெயம்ரவியின் சகோதரர் மைலாப்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

மேலும் விஜய் ஆண்டனி விருகம்பாக்கம் வாக்குச்சாவடியிலும், சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் வாக்குச்சாவடியிலும், நடிகர் சரத்குமார் கொட்டிவாக்கம் வாக்குச்சாவடியிலும் வாக்கு செலுத்தினர். பாரதிராஜார் ஆயிரம் விளக்கில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நடிகை திரிஷா ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியிலும், நடிகர் கார்த்திக் மற்றும் சூர்யா, சிவகுமார் தி.நகர் வாக்குச்சாவடியிலும் வாக்குச் செலுத்தினர். மேலும் சென்னை எத்திராஜ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகை நிக்கிகல்ராணி வாக்குச்செலுத்தினார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது குடும்பத்தினருடன், திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மேலும் நடிகைகள் சினேகா, நமிதா அகியோரும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். மேலும் நடிகர் சித்தார்த்தும் தனது வாக்கினைச் செலுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் ஒரே நாளில் 42,766 பேருக்கு கொரோனா

Halley Karthik

கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை

காவிரி குடிநீர் தினந்தோறும் வழங்கப்படும் :எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

Halley Karthik