முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

“கலைஞரின் பாதம் தொட்டு வணங்கிருப்பேன்”:சிவகுமார்

‘தமிழ் சினிமா அப்பாக்களின் கதை’ என்ற தலைப்பில் ஒரு ‘கதைகளின் கதையே’ எழுதும் அளவிற்கு கடந்த வாரம் முழுவதும் பல சாகசங்கள் அரங்கேறின. பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறிய கருத்து, பாக்யராஜின் பரபரப்பு பேச்சு என இணையமே அமளி துமளியானது. மேலும், அப்பாக்களின் ஆக்‌ஷன்களுக்கு பிள்ளைகள் நேரடியாகவோ, மறைமுகமாவோ ரியாக்‌ஷன்களை கொடுக்கும் சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை வைத்து ஒரு கலைநயமிக்க சாகசத்தை செய்திருக்கிறார் நடிகர் சிவகுமார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘தீராக்காதல் திருக்குறள்’ திட்டத்தின் கீழ் நடிகர் சிவகுமார் எழுதிய ‘திருக்குறள் 50’ என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் குரலோவியம் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரான ஐ. லியோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கம்பராமயணமும், மகாபாரதக் கதைகளையும் எடுத்து சொல்வதில் வள்ளவரான சிவகுமார் இந்நிகழ்ச்சியில் புறநாற்று பாடலையும் அதை வைத்து கருணாநிதி எழுதிய வசனங்களையும் பேசிக்காண்பித்தார் . அப்போது அப்பாடலில் இடம்பெறும் ‘கொழுநன்’ எனும் வார்த்தையை சிவகுமார் மறக்க உடனே அமைச்சர் தங்கம் தென்னரசு அவருக்கு அந்த வார்த்தையை எடுத்துக்கொடுக்க என்று ரகளையாக நடந்துள்ளது இந்நிகழ்ச்சி.

மேலும், நடிகர் சிவக்குமார் எழுதிய திருக்குறள் – 50 புத்தகத்தையும் அமைச்சர்கள் வெளியிட்டனர். இது குறித்து பேசிய சிவக்குமார், “நான் முதலில் நன்றி கூற விரும்புவது கலைஞர் அய்யாவுக்கு தான். அவர்தான் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலையையும் வைத்தவர். கலைஞர் தற்பொழுது இருந்திருந்தால் அவர் பாதம் தொட்டு வணங்கியிருப்பேன்” என்று உள்ளம் உருகினார்.

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியை புகழ்ந்த திரைக்கலைஞர்கள் மட்டும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சிவக்குமார் புகழும்போது மட்டும் பெரிதாக எதிர்மறை விமர்சனங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. இந்நிலையில், ‘எங்களை சப்போர்ட் பன்னவங்கள மட்டும் ஏன் அவ்ளோ காட்டமா வச்சி செய்றீங்க’ என்ற நியாயமான கேள்வியை பிரதமர் மோடி ஆதரவாளர்கள் முன்வைக்க, ‘அது தெரிஞ்சா நீங்க ஹீரோவாயிடுவீங்களே!’ என்று அநியாயத்துக்கும் கலாய்த்து வருகின்றனர் கருணாநிதி ஆதரவாளர்கள். இந்த சம்பவத்தின் மூலம் நடிகர் சூர்யாவுக்கு கருப்பு டீசர்ட் வாங்கும் செலவு மிச்சம் எனவும் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நாளைக்குள் சிம்புவின் அப்பாவும் கோதாவில் இறங்கினால், சூப்பர் ஹிட் வெள்ளியாக இந்த வாரம் சிறப்பாக நிறைவடையும் எனவும் இணையவாசிகளால் எதிர்ப்பார்க்கபடுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிள்ளையோ பிள்ளையும் பேரப்பிள்ளையும்; நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

EZHILARASAN D

‘பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்த திட்டம் எதுவும் அரசிடம் இல்லை’

Arivazhagan Chinnasamy

6 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டி! – IJK அதிரடி அறிவிப்பு!

Nandhakumar